NR Dinosh - Kadaththum Vizhigal
உனதழகொரு புகைப்படம்
இருவிழிகளும் நிகழ்ப்படம்
கருங்கூத்தல்கள் நிழல்படம்
இதழ் அசைவுகள் ஒளிப்படம்
நேரங்கள்
மின்னல்கள்
எண்ணங்கள்
வண்ணங்கள்
நேரங்கள் யாவும்
மின்னல்கள் தானே
எண்ணங்கள் யாவும்
வண்ணங்கள் தானே
உனதழகொரு புகைப்படம் புகைப்படம்
இருவிழிகளும் நிகழ்ப்படம் நிகழ்ப்படம்
கருங்கூத்தல்கள் நிழல்படம் நிழல்படம்
இதழ் அசைவுகள் ஒளிப்படம் ஒளிப்படம்
நடக்கும் அழகு
நேர்கொண்ட பார்வை
முகத்தில் தெரியும் புன்னகை நேர்மை
கடத்தும் விழிகள் அறிவியல் கூர்மை
நகரும் நொடிகள் சொல்லிடும் தீர்வை
இரவு கடந்து விடிந்திடும் வேளை
இமைகள் விழித்து
சிரித்திடும் காலை
காற்றுக்கென்ன எல்லையின் தேவை
உனக்கு ஏது அழகென்னும் எல்லை
உலகத்தொடக்கம் அதிர்வெடி தத்துவம்
அதிலே தொடங்கி இசைவரை வந்திடும்
நீயும் நானும் பேசிடும் பேச்சும்
இருவர் மனதிலும் ஏரணம் ஆகும்
உலகத்தொடக்கம் அதிர்வெடி தத்துவம்
அதிலே தொடங்கி இசைவரை வந்திடும்
நீயும் நானும் பேசிடும் பேச்சும்
இருவர் மனதிலும் ஏரணம் ஆகும்
உனதழகொரு புகைப்படம்
இருவிழிகளும் நிகழ்ப்படம்
கருங்கூத்தல்கள் நிழல்படம்
இதழ் அசைவுகள் ஒளிப்படம்
உனதழகொரு புகைப்படம்
இருவிழிகளும் நிகழ்ப்படம்
கருங்கூத்தல்கள் நிழல்படம்
இதழ் அசைவுகள் ஒளிப்படம்
நேரங்கள்
மின்னல்கள்
எண்ணங்கள்
வண்ணங்கள்
நேரங்கள் யாவும்
மின்னல்கள் தானே
எண்ணங்கள் யாவும்
வண்ணங்கள் தானே
உனதழகொரு புகைப்படம் புகைப்படம்
இருவிழிகளும் நிகழ்ப்படம் நிகழ்ப்படம்
கருங்கூத்தல்கள் நிழல்படம் நிழல்படம்
இதழ் அசைவுகள் ஒளிப்படம்
Written by:
Dinosh Ratnam
Publisher:
Lyrics © O/B/O DistroKid
Lyrics powered by Lyric Find